×

அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தண்ணீர் கேன் உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

சென்னை: தண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தை வாபஸ் செய்துள்ளனர். குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க கோரி முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் உள்ள 450 நிறுவனங்களில் 300 நிறுவனங்களை மூட உள்ளதாக கேன் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசாணையை பின்பற்றி நிறுவனங்களை மூட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது,  நிலத்தடி நீரை எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி மாலை முதல் நிறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் பொது பணி துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முரளி, குடிநீர் ஆலையை மூட கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்து வேலை நிறுத்தத்தினை அறிவித்தோம்.  இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர். அதனால் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது என கூறியுள்ளார். வரும் 22-ம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த முன்று நாட்களாக  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூன்று மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே மீண்டும் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Negotiations ,Water Cannon ,fight ,protesters , Negotiations with the government: Negotiations with water cannons
× RELATED மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில்...