×

சித்தன்னவாசல் மலைமேல் சுனையில் சிவலிங்கத்திற்கு 25 ஆண்டுக்கு பின்னர் பக்தர்கள் வழிபாடு

இலுப்பூர்:  அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் மலை மேல் சுனையில்  சிவலிங்கத்திற்கு 25 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.  புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ மணப்பாறை சாலையில் சித்தன்னவாசல் சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுக்கை, உலக புகழ்பெற்ற குகை ஓவியம்,ஏழடிபட்டம ஆகியவை மிகவும் புகழ்மிக்கது. மேலும் இங்கு மரங்கள்  சூழ சிற்பங்கள் மற்றும் பொம்மைகளுடன் அமைக்கபட்ட பூங்கா,  சிறுவர் விளையாடி மகிழும் விதமாக அமைக்கப்பட்ட பூங்கா, படகு குழாம் போன்றவைகள் சுற்றுலா பயணிகள் மகிழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க பல தொன்மையான வரலாற்று சின்னங்களை இருந்தாலும் சமணர் படுக்கைக்கு மேல் யாரும் எளிதாக செல்ல முடியாத இடத்தில் குகையின் உள்ளே சிவலிங்கம் ஒன்று உள்ளது. மழை நீர் நிரம்பி இருக்கும் இந்த சுனையின் பெயர்  நாவல் சுனை. இந்த சுனையின் உள்ளே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்த சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு யாரும் செல்ல முடியாது .சிறிதளவு மழை பெய்தால் கூட சுனை பகுதி நீர் நிரம்பி விடும். சிவலிங்கம் உள்ள இடம் யாருக்கும் தெரியாது.

இங்கு மலை மேல் சுனை குகையில் சிவலிங்கம் உள்ளது இப்பகுதியில் உள்ள சிலரை தவிர யாருக்கும் தெரியாது. இந்நிலையில் தொல்லியல்துறை மற்றும் பக்தர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நாவல் சுனையில் இருந்த நீரை அகற்றி குகையில் இருந்த மாசுபட்ட நீரை அகற்றி சுத்தம் செய்தனர்.   சிவலிங்கத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. சித்தன்னவாசல், நல்லம்மாள் சத்திரம் சுற்று வட்டார பகுதியை  சேர்ந்த பக்தர்கள் இந்த நாவல் சுனைக்கு வந்து குகையில் இருந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.  கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து தெரிந்த சிவலிங்கம் நேற்று பெய்த  மழையினால் மீண்டும் சுனையில் நீர் பெருகியது. இதனால் சிவலிங்கத்தை தரிசிக்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Devotees ,hills ,Sithannavasal ,Shiva Lingam , Sittanavasal, Shiva Lingam, devotees
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...