×

விநாயகர் கோயில் அருகே பட்டமரங்கள் துளிர்த்த அதிசயம் : கிராம மக்கள் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த  தில்லைவிளாகம் தெற்கு வள்ளிக்குளக்கரை பகுதியில், அருள்தந்த வினாயகர் கோயில் உள்ளது. இதன் அருகே அரசு மற்றும் வேம்பு மரங்கள் ஒன்றுடன் இணைந்து ஒரே மரமாக வளர்ந்தன. பரந்து விரிந்து பசுமையுடன் வளர்ந்த வேம்புஅரச மரத்துக்கு திருக்கல்யாணம் நடத்த சில மாதங்களுக்கு முன்பு  கிராமவாசிகள் முடிவு செய்தனர். இதையடுத்து  கடந்த ஜுலை  11ம் தேதி காலை 9 லிருந்து 10.30க்குள் திருமணம் நடத்த முடிவு செய்து ஆயிரம் திருமண பத்திரிக்கை அச்சிட்டப்பட்டடு வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தது. கிராம முக்கியஸ்தர்கள் ஆளுக்கொரு பணியை இழுத்து போட்டு செய்தனர்.  

இந்தநிலையில் மணமக்களாக பசுமையுடன் காட்சியளித்த இரு மரங்களிலும்  திடீரென்று இலைகள் உதிர ஆரம்பித்து பட்டுப்போனது. இதனைக்கண்ட பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றுக்கூடி பட்டுப்போன மரத்திற்கு திருக்கல்யாணம் நடத்த முடியாது என்று முடிவு செய்து திருமணத்தை நிறுத்தினர். இதுகுறித்து தினகரனில் செய்தியும் வெளியானது. பின்னர் பட்டுப்போன அந்த மரத்தை வெட்டி அகற்றாமல்  அப்படியே வைத்து இருந்தனர்.  கோயில் கட்டுமான பணியை துரிதப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் பட்டுப்போய் இருந்த இந்த மரங்கள் சில தினங்களுக்கு முன்பு திடீரென்று துளிர்விட துவங்கியது. இதனால் மரத்தின் பல பகுதி பச்சையாக மாரிவருதுவதுடன் பல இடங்களில் இலைகள் துளிர்விட்டுள்ளது. இதனைக்கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அர்ச்சுனன் என்பவர் கூறுகையில்,  அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் இருந்தும் மரங்கள் பட்டுப்போனது கிராம மக்களை வேதனை அடைய செய்தது. இந்நிலையில் பட்ட மரங்கள் துளிர் விட்டது எங்கைள மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனால் தடைபட்ட திருமணத்தை நடத்தலாமா என்று ஊர்கூடி முடிவு எடுப்போம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gates ,Vinayaka Temple , Vinayagar Temple, trees,miracle
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை