×

செயற்கை நுண்அறிவாற்றல் துறையில் உலகளவில் இந்தியாவிற்கு 13-வது இடம்

ஹெல்சின்கி: செயற்கை நுண்அறிவாற்றல் (artificial intelligence) எனப்படும் துறையில் இந்தியா முதல் 15 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. கணினியை கட்டமைப்பது, கணினியால் உருவாக்கப்படும் ரோபோக்களை உருவாக்குவது, அல்லது மனித மூளை சிந்திப்பதைப் போல் மென்பொருள் ஒன்றை இயங்கச் செய்வது போன்ற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகளை செயற்கை நுண்அறிவாற்றல் என்று அழைக்கப்படுவது வழக்கம்.

பின்லாந்து நாட்டின் ஏஐ (AI) வல்லுனர்கள் குழுவான சைப்ஃபிரா (zyfra) 200 நாடுகளையும் 50 புகழ்பெற்ற அறிவியல் இதழ்களையும் வைத்து நடத்திய ஆய்வில் செயற்கை நுண்அறிவாற்றல் துறையின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் அமெரிக்காவும், அதற்கு அடுத்த இடத்தில் சீனாவும் உள்ளன. இதில் கனடாவிற்கு அடுத்ததாக 13-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. மேலும் அறிவியல் ஆய்வுகளை நடைமுறைபடுத்துவதற்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு கட்ட முயற்சிகள் குறித்தும் இந்த ஆய்வு விவரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு இப்போது பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ரோபாட்டிக்ஸ் துறை AI தொடர்பான துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் இவை பொருள்களை கையாளுதல் மற்றும் ஊடுருவல் போன்ற பணிகளை கையாளுவதற்கு பயன்படுகிறது. செயற்கை நுண்அறிவாற்றல் உதவியுடன் கார்களை இயக்கும் வகையில் பல்வேறு வசதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,world , India,ranked,13th,world,artificial intelligence
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...