இலங்கை அதிபர் சிறிசேனாவை இந்திய உளவு அமைப்பு கொலை செய்ய சதி?

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனாவை படுகொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ரா சதித்திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தன்னை படுகொலை செய்ய ரா உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிறிசேனாவே கூறியதாக செய்திகள் வெளியாகின. இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாது என சிறிசேனா தெரிவித்ததாக கூறப்படுகிறது. பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகளை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அதிபரின் ஆலோசகர் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை போலீசார் கொழும்புவில் கைது செய்துள்ளனர். அதிபர் சிறிசேனா மட்டுமின்றி ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவையும் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் திட்டியதாக இவர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஓரிரு நாளில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் சிறிசேனா வெளியிட்டுள்ள தகவல் தெற்காசிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>