டென்மார்க் ஓபன் பேட்மின்டன் முதல் சுற்றிலேயே சிந்து அதிர்ச்சி தோல்வி

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் பெய்வன் ஸாங்குடன் முதல் சுற்றில் நேற்று மோதிய சிந்து 17-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 21-16 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது.

இரு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறிய நிலையில், அமெரிக்க வீராங்கனை 21-17, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 56 நிமிடத்துக்கு நீடித்தது. பெய்வன் ஸாங்கிடம் தொடர்ந்து 3வது முறையாக சிந்து மண்ணைக் கவ்வியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த இந்தியன் ஓபன் தொடரின் பைனலிலும் ஸாங்கிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sindhu ,round ,Denmark Open , Denmark Open Badminton, Indus, Failure
× RELATED ‘பி.வி.சிந்துவை காதலிக்கிறேன்......