×

தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு நடவடிக்கை தேவை: அன்புமணி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பெரம்பூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனும் பன்றி காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார். ஆனால், வழக்கம் போலவே அவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்து விட்டதாக அறிவித்து, சென்னையில் பன்றி காய்ச்சல் பரவியதை மூடி மறைப்பதால்யாருக்கும் உதவாது.

இந்த ஆண்டில் இதுவரை 232 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேர் இறந்துள்ளனர். கடந்த கால அனுபவத்திலிருந்து தமிழக அரசு பாடம் கற்றிருந்தால் நடப்பாண்டில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தேவை. பன்றி காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,DMRC , Swine Flu, Prevention, Pregnancy Report
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...