×

வர்தா புயலில் காணாமல் போனவர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டது அரசு

சென்னை: கடந்த ஆண்டு, ‘வர்தா’ புயலில் சிக்கி காணாமல் போன 9 பேரின் விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2016ல் ‘வர்தா’ புயல் தாக்கியது. அதில் காணாமல் ேபானதாக கூறப்படுபவர்கள் குறித்து கண்டறிவதற்காக குழு அமைக்கப்பட்டது. அதில், தண்டயார்பேட்டை, சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரவிசெல்வன் (50), நிர்மல்ராஜ் (25), வினோத் (23), அந்தோணிராஜ் (53), ராஜேந்திரன் (25), மாதவேல் (30), அதேபகுதியில் உள்ள ஜீவா தெரு சிவா (24), ஆந்திரா, மெய்பாடு பகுதியை சேர்ந்த, கொண்டுரு மல்லிகா அர்ஜூனா (30), துரைராஜ் பட்டிணம் வெங்கட்ரமணா (30) ஆகியோர் வர்தா புயலில் காணாமல் போய்விட்டதால், அவர்கள் உயிருடன் இல்லை என கருதப்படுகிறது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உயிருடன் இருப்பதாக தெரிந்தால், மக்கள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், சென்னை ஆட்சியர் ஆகியோருக்கு 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,persons ,storm ,Varda , Disappeared,Varda storm,published, Government
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...