×

விதிமீறிய 3 வாகனங்கள் பறிமுதல்-கலெக்டர் நடவடிக்கை

வேலூர் :  வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. ஒரே ஆட்டோவில் 15 பேர் வரையில் பயணம் ெசய்வது, சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இதனால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் ஒரே ஆட்டோவில் 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். அதேபோல் மினி வேனின், முன்பகுதியில் ஆபத்தான முறையில் உட்கார்ந்து பயணம் செய்த 5 பேர்கொண்ட புகைப்படமும், விளக்கச்செய்தியும் தினகரன் நாளிதழில் நேற்று வெளியானது. தினகரன் படவிளக்க செய்தி எதிரொலியாக கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக அதிக பயணிகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, சரக்கு வேனில் ஆட்களை ஏற்றிச்சென்றது உட்பட 3 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகன விதிமீறல்களில் ஓட்டுனர்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்….

The post விதிமீறிய 3 வாகனங்கள் பறிமுதல்-கலெக்டர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...