×

சீனாவின் சோங்கிங் நகரில் இரட்டை குழந்தைகளுக்கான திருவிழாக் கோலாகலம்

சீனா: சீனாவில் நடைபெற்ற இரட்டை குழந்தைகளுக்கான திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோங்கிங் நகரில் அதிக அளவில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அந்நாட்டில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த நகரில் 1,100 பேர் கொண்ட 367 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 42 ஜோடிகள் இரட்டை குழந்தைகள் ஆக உள்ளனர். வழக்கமாக மொத்த மக்கள் தொகையில் 1% மட்டுமே இரட்டை குழந்தைகள் பிறக்கும் நிலையில், இந்த நகரில் மட்டும் 11.4 % பேர் இரட்டை குழந்தைகளாக உள்ளனர்.

இதனை கொண்டாடும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை போற்றும் வகையில் திருவிழா நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இந்த திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது. இதில் அந்நாடு முழுவதிலும் இருந்து 66 ஜோடி இரட்டை குழந்தைகள் கலந்து கொண்டனர். எண்ணற்ற இரட்டை குழந்தைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : babies ,festivals ,China ,Chongqing , China,twin children,festival
× RELATED ஹோலி பண்டிகை கொண்டாட்டம்