×

இந்திய தபேலா இசைக்கலைஞரை கவுரவப்படுத்தி டூடுல் வெளியிட்ட கூகுள்

டெல்லி: உலகப் புகழ் பெற்ற தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை பதித்த லச்சு மகாராஜ் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி வாரணாசியில் பிறந்தார். தபேலா வாசிப்பதில் சிறந்து விளங்கிய லச்சு மகாராஜ், பல படங்களிலும் நடித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் இன்று இந்தி திரைப்பட உலகில் தபேலா கலைஞர்களாக உள்ளனர்.

மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளிக்க முன் வந்த போது, இசை ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்மஸ்ரீ விருது தேவையில்லை என்று கூறியவர் இவர். 1957-ம் ஆண்டு இயல் இசை நாடகத்துறையில் அதிகப்பட்ச விருதான சங்கீத நாடக அகாடமி விருதினை பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் உடல் நலக்குறைவால் லச்சு மகாராஜ் காலமானார். இந்நிலையில், லச்சு மகாராஜின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், சிறப்பு டூடுலை தனது முகப்புப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : musicologist ,Indian , Tabla musician, Lacchu Maharaj, doodle, Google
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...