×

திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை: திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி தொடங்கியது. 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் நேற்றிரவு நடந்தது. தங்க கருட வாகனத்தில் மாட வீதியில் வந்த ஏழுமலையானை கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என சுவாமி தரிசனம் செய்தனர்.

6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகன உற்சவம் நடந்தது. இதில் ஏழுமலையான் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை 4 மணிக்கு புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் 4 மாடவீதியில் வலம் வருகிறார். இரவு தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். சுவாமி மாட வீதி உலாவின்போது வெளிமாநில கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malaiyappa Swamy Parvani ,Navarathri Brahmotsavam ,Tirupati , Tirupati, Navarathri Brahmotsavam, Approved Vehicle, Malaiyappa Swamy, Pavani
× RELATED ஆற்காடு அருகில் திரவுபதி அம்மன்...