×

சபரிமலை போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பத்துடன் நாளை தேவசம்போர்டு ஆலோசனை

திருவனந்தபுரம்: சபரிமலை  கோயில் பிரச்னையின்  தீவிரத்தை குறைப்பதற்காக தந்திரி குடும்பம் மற்றும் பந்தளம்  மன்னர் குடும்பத்தினருடன் நாளை ஆலோசனை நடத்த  திருவிதாங்கூர் தேவசம்போர்டு  தீர்மானித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து பிரச்னையின் தீவிரத்தை  குறைக்க தேவசம்போர்டுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் கேரள அரசு பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் தந்திரி குடும்பத்தினரை பேச்சுவார்த்தைக்கு  அழைத்திருந்தது.

ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தனர். இதையடுத்து நாளை தந்திரி குடும்பம் மற்றும் பந்தளம் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த திருவிதாங்கூர்  தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க கூட்டம் நடப்பதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஆனால் சமரசம் பேசவே  கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு தந்திரி சமாஜம், ஐயப்பா சேவாசங்கம், யோக ஷேம சபா ஆகியவற்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pandalam ,struggle ,Sabarimala , Reduce,seriousness ,Sabarimala struggle,Tantry, consulted ,kings family tomorrow
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்