×

எங்களது நெஞ்சில் மிதித்து தான் பெண்கள் சபரிமலை ஏற முடியும்: ராகுல் ஈஸ்வர், சபரிமலை தந்திரி குடும்ப உறுப்பினர்

சபரிமலை  கோயில் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில்  இவ்வளவு பெரிய எதிர்ப்பு வரும் என்று ஆட்சியாளர்கள் உட்பட யாரும்  எதிர்பார்த்திருக்க  மாட்டார்கள். மக்கள் அனைவரும் அரசியல், சாதி, மத  வேறுபாடின்றி போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். கடந்த சில  தினங்களாக கோழிக்கோடு, கண்ணூர் உட்பட வடகேரள  மாவட்டங்களிலும் போராட்டம் மிக  வேகமாக பரவி வருகிறது.கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கூட இந்த போராட்டத்தில் கலந்து  கொண்டுள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று  திரண்டு போராட்டங்களை  ஒருங்கிணைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து  உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக எங்களது தமிழ் சகோதரர்கள்   நடத்திய போராட்டத்தை நாங்கள் மறக்கவில்லை. அது தான் எங்களதுஇந்த   போராட்டத்திற்கு உந்து சக்தியை ஏற்படுத்தியது. எங்களது இந்த  போராட்டத்திற்கு ‘சபரிமலைக்கு பள்ளிக்கட்டு, ஐயப்பனுக்கு ஜல்லிக்கட்டு’  என்று தான் பெயர் வைத்துள்ளோம். ஐயப்ப  ஜல்லிக்கட்டுக்காக பள்ளிக்கட்டுடன்  நாங்கள் செல்கிறோம். எங்களுக்கு முன் இரண்டே இரண்டு குறிக்கோள்கள்  மட்டும் தான் உள்ளன. முதலாவதாக சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்தை அணுக  தீர்மானித்துள்ளோம். வரும் 22ம் தேதி சபரிமலைக்கு நீதி  கோரி  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இரண்டாவதாக ஜனநாயக முறைப்படி  காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவோம்.

ஐப்பசி மாத  பூஜைகளுக்காக அக்டோபர் 17ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை  திறக்கப்பட உள்ளது. 22ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். 17ம் தேதி  மாலை 5 மணி முதல்  22ம் தேதி இரவு 10 மணி வரை 125 மணிநேரம் தொடர் போராட்டம்  சபரிமலையில் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.  சபரிமலைக்கு வரவிருப்பதாக  பெண்ணியவாதிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு நல்ல  அறிவுரை கூறி திருப்பி அனுப்ப முயற்சிப்போம். அவர்கள்  மறுத்தால் எங்களது நெஞ்சில் மிதித்து செல்லுமாறு கூறி லட்சக்கணக்கானோர்  சபரிமலையில் ரோட்டில் படுத்து  போராட்டம் நடத்துவோம். இது முழுக்க முழுக்க  சட்டத்திற்கு உட்பட்ட போராட்டமாக இருக்கும்.அது மட்டுமல்லாமல்  சபரிமலையிலுள்ள ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த  போராட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.சபரிமலை நடை திறக்கப்படும்  17ம் தேதி முதல் நடை மூடப்படும் 22ம் தேதி வரை சபரிமலை செல்லும்  வனப்பகுதிகள் முழுவதையும் இவர்கள் மூடிவிடுவார்கள். வனப்பகுதிகளில்  இரவு  பகலாக ஆதிவாசி மக்கள் காவல் காக்க தயாராக உள்ளனர். இந்தியாவில் அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது.  இந்திய சட்டப்பிரிவு 25ன் படி இந்த உரிமை அனைவருக்கும் உண்டு. இந்த உரிமையை  பாதுகாக்க வேண்டியது அனைவரின்  கடமையாகும். எங்களது இந்த அறப்போராட்டம்  வெற்றியில் முடிவடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,Rahul Iswar ,Sabarimala ,Sabbirai Tandari , In our chest Women, trampling , Sabahiram ,Rahul Iswar, Sabarimala Tantri family member
× RELATED மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பெண் உள்பட 6 பேர் கைது