×

இந்து தர்மத்திற்கான போராட்டம்தான் இது: ஷில்பா நாயர், தலைவர், மக்கள் தர்ம இயக்கம்

சபரிமலை  ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களை விட வித்தியாசமானதாகும். இங்கு ஐயப்பன் ஒரு  நித்திய பிரம்மச்சாரியாக உள்ளார். அதனால் தான் 10 முதல் 50 வயதுக்கு  உட்பட்ட  பெண்களுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சென்றால்  ஐயப்பனின் பிரம்மச்சரியத்திற்கு களங்கம் ஏற்பட்டு விடுமா என்று சிலர்  கேட்கின்றனர். அதில் எந்த அர்த்தமும்  இல்லை. வாழ்க்கையில் ஆணாக இருந்தாலும்  சரி, பெண்ணாக இருந்தாலும் சரி....பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு  இடையூறு செய்வது நல்லதல்ல அல்லவா? அது போல தான்  இதுவும்.உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம்  ஆகியவற்றையும், சபரிமலை கோயிலில் உள்ள பெண்களுக்கான கட்டுப்பாடுகளையும்  இணைத்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அந்த  இரண்டையும் ஒழித்ததைப் போல  சபரிமலையில் பெண்களுக்கு உள்ள கட்டுப்பாட்டையும் ஒழிக்க வேண்டும் என்று  கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சபரிமலையில்  கடைப்பிடிக்கப்படும்  ஆசாரங்களால் யாருக்கும் எந்த துன்பமும், சிரமமும் ஏற்படுவதில்லை. இங்கு  எந்த பெண்ணின் உரிமைகளும் பறிக்கப்படுவதில்லை.சபரிமலைக்கு  செல்லப்போவதாக கூறும் பெண்கள் யாரும் பக்தியால் உந்தப்பட்டவர்கள் அல்ல.  அவர்கள் வீம்புக்காகவும், சவாலுக்காகவுமே இந்த நடவடிக்கைகளில்   ஈடுபடுகின்றனர். சபரிமலையில் பெண்களுக்கு தடை இருப்பதாக தவறான தகவல்களை  பரப்புகின்றனர். பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என சபரிமலை செல்லும்   அனைவருக்கும் தெரியும். ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டுமே அங்கு  தடை உள்ளது. அது சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஒரு முக்கிய ஆசாரமாகும். அதை  ஏன் தடுக்க  முயற்சிக்கின்றனர் என புரியவில்லை.

 2 வருடங்களுக்கு முன்பு தான்  உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் எனது தலைமையிலான மக்கள் தர்ம  இயக்கம் இணைந்தது. அதற்கு முன் இந்த வழக்கு குறித்து கேள்விப்பட்டு  மனம்  சஞ்சலப்பட்டு ‘ரெடி டு வெயிட்’ என்ற இயக்கத்தை நானும் சில பெண்களும்  சேர்ந்து தொடங்கினோம். அதாவது, ‘சபரிமலைக்கு செல்ல 50 வயது வரை காத்திருக்க  தயார்’ என்ற பேனரை  ஏந்தி சமூக இணையதளங்களில் ஒரு பிரச்சாரத்தை  தொடங்கினோம். எத்தனை பெண்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என அறிவது தான்  எங்களது திட்டம்.ஆனால் நாங்களே ஆச்சரியமடையும் வகையில் தமிழ்நாடு,  கேரளா, ஆந்திரா, காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் நாங்களும் காத்திருக்கத் தயார்  என்று கூறி எங்களுக்கு  ஆதரவளித்தார்கள். அதன் மூலம் கிடைத்த உற்சாகம் தான் உச்சநீதிமன்றத்தில்  இந்த வழக்கில் எங்களையும் இணைய வைத்தது. எங்களது கருத்துக்களையும்  அந்த  வழக்கில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பி மக்கள் தர்ம இயக்கத்தை  சென்னையில் பதிவு செய்து எங்களது பணிகளை தொடங்கினோம். கேரளாவில்  கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெற்று வரும்  போராட்டங்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி சில பெண்கள்  சபரிமலைக்கு  வரப்போவதாக கூறியுள்ளனர். அவ்வாறு வரும் பெண்களுக்கு நாங்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். சபரிமலை கோயில் விவகாரத்தில் நல்ல தீர்வு  கிடைக்கும் வரை போராடுவோம்.  எந்தக் காரணம் கொண்டும் அதிலிருந்து  பின்வாங்கப் போவதில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : struggle ,Shilpa Nair ,People Dharma Movement , Hindu Dharma,struggle: Shilpa Nair, leader, popular Dharma movement
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...