×

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்..... ஜோகோவிச் சாம்பியன்

ஷாங்காய்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் நேற்று மோதிய ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் அவர் 4வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஏடிபி உலக டூர் மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் ஜோகோவிச் வென்ற 32வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் ஒற்றையர் தரவரிசையில் ஆண்டு இறுதி நம்பர் 1 அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பும் அவருக்கு பிரகாசமாகி உள்ளது. தற்போது ரபேல் நடால் (7,480), ஜோகோவிச் (7,045), ஜுவன் மார்டின் டெல்போட்ரோ (5,300), ரோஜர் பெடரர் (5,160), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (4,770) முதல் 5 இடங்களில் உள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jogovich Champion , Shanghai Masters tennis, djokovich, Champion
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!