×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போக்குவரத்து பூங்கா அமைக்க ஹோண்டாவுடன் ஒப்பந்தம்: மாநகராட்சி தகவல்

சென்னை: விபத்துகள் இல்லாத நகரத்தை உருவாக்கவும், அனைவருக்கும் போக்குவரத்து விதிகளை எளிதில் தெரிந்து கொள்ளவதற்காகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் நேப்பியர் பாலம் அருகில் ரூ.2 கோடி  செலவில் போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது.  இந்தப் பூங்காவில் சாலைகள் அமைக்கப்பட்டு அதில் அனைத்து விதமான போக்குவரத்து குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பூங்காவிற்கு வருபவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும். அவர்கள் சைக்கிளில் செல்லும் போது சாலையில் உள்ள அனைத்து விதிகளையும் மதித்து செல்ல வேண்டும். இந்த பூங்காவில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ேஹாண்டா ேமாட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 12 போக்குவரத்து பூங்காக்களை பராமரித்து வருகிறது. இதன் அடிப்படையில்தான் ஹோண்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. வயது வாரியாக பல்வேறு வசதிகள்  

இந்த பூங்காவில் அமைய உள்ளன. 5 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு  போக்குவரத்து வசதிகளை விளையாட்டுடன் சேர்ந்து கற்றுத் தர பல்வேறு விளையாட்டு அம்சங்கள்,  9 வயது முதல் 12 வயதுள்ளவர்கள் போக்குவரத்து பூங்காவை சுற்றி வர பைக்குகள், 13 வயது முதல் 16 வயதுள்ளவர்களுக்கு போக்குவரத்து ெதாடர்பான பாடங்களை கற்றுத்தர வகுப்புகள், 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்டுவது தொடர்பான பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் ஆகியவற்றை ஹோண்டா நிறுவனம் வழங்கும். மேலும் இந்த வசதிகளை மூன்று ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியும், சென்னையில் மேலும் போக்குவரத்து பூங்காக்களை அமைக்கும் பணியும் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : traffic park ,Honda , Smart City project, traffic park, Contract, Honda, Corporation
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...