×

பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை வருமா?எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: சர்வதேச மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.  இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு பிறகும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க  இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு விலக்கு அளிக்க அமெரிக்காவிடம் கோரி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச மற்றும் இந்திய எண்ணெய் நிறுவன  அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது: கடந்த 2014-15ல் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 77 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டது. இதை வரும் 2022ம் ஆண்டுக்குள் 67 சதவீதமாக குறைக்க இருப்பதாக 2015ம் ஆண்டு பிரதமர்  மோடி  அறிவித்தார். ஆனால், இறக்குமதி தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீடுகளை பெருக்குவது போன்றவை தொடர்பாக ஆய்வு  செய்யப்பட இருக்கிறது.

  நிதி ஆயோக் ஏற்பாடு செய்த  இந்த கூட்டத்தில் சவூதி எண்ணெய் வள அமைச்சர் கலீத் அல்பாலிக், பிரிட்டிஷ் பெட்ரோலியம் தலைமை செயல் அதிகாரி பாப் டட்லி, பிரான்சை சேர்ந்த பெட்ரோலிய  நிறுவனமான டோட்டல் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாட்ரிக் பவுயான், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர்  பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஓஎன்ஜிசி தலைவர், ஐஓசி, இந்துஸ்தான் பெட்ரோலியம் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.  எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஈர்க்கப்பட்டு வருகின்றன.  ஆனால், எரிபொருள் ேதவை ஆண்டுக்கு  5 முதல் 6 சதவீதம் உயர்ந்து வருகிறது. தற்போது கச்சா  எண்ணெய் 83 சதவீதம் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் பாதி அளவுக்கு இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது இன்றைய  ஆலோசனையின் முக்கிய விவாதமாக இருக்கும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,oil firms , Prime Minister,Narendra Modi,advised,firms, petrol prices
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...