×

ஆலப்புழா ரயிலில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ஆலப்புழா ரயிலில்  40 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரயில்நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரலுக்கு இன்று கேரளாவிலிருந்து  ஆலப்புழா  எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதிகாலை 1.10 மணிக்கு 9வது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. அப்பொழுது இரவுப்பணியில் இருந்த தலைமை காவலர் ரயில் வந்தபிறகு வழக்கம் போல் சோதனையை மேற்கொண்டார். அப்போது, இந்த ரயிலின்  பொதுப்பிரிவு பெட்டியில் கேட்பாரற்று மூன்று பேக்குகள் கிடந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த மூன்று பைகளை திறந்து சோதனை நடத்தினார். அப்போது, அதில் சிறு சிறு பேக்கிங்காக  40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சாவை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார் உடனடியாக அங்குள்ள ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனை கைப்பற்றிய பாதுகாப்பு படை போலீசார் ஆலப்புழா ரயில் முழுவதும் தொடர்  சோதனையை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு பிறகு, இது தொடர்பாக பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக பொதுப்பிரிவு பெட்டியில் இருந்து இறங்கிய மர்ம நபர்களை கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அதில், சந்தேகத்திற்கிடமான வகையில் இறங்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cancellation ,passenger ,Alappuzha ,railway station , Alleppey Railway, 40kg of Ganja, Central Railway Station
× RELATED மலேசியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற...