×

முதியோர், கொரோனா பாதித்தவர்கள் காரைக்கால் மாவட்டத்தில் 410 பேர் வீட்டிலிருந்தபடி தபால் வாக்குப்பதிவு

காரைக்கால் : காரைக்காலில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் 80 வயது முதியவர்கள், கொரோனா பாதித்தவர்களிடம் வீட்டிலிருந்தபடியே 410 பேரிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்று உடையவர்களிடம் தபால் வாக்குகள் பெற தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன்படி காரைக்கால் மாவட்டத்தில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நேற்றுமுன்தினம் துவங்கி இன்று (27ம் தேதி) வரை மூன்று நாட்கள நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளிலும் 80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு வீடுகளிலேயே உடனடி வாக்குச்சாவடிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 25ம் தேதி காரைக்கால் தெற்கு தொகுதியில் 69 பேரும், காரைக்கால் வடக்கு தொகுதியில் 68 பேரும், நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் 92 வாக்காளர்களும், இதேபோல் நெடுங்காடு தொகுதியில் 77 பேரும், திருநள்ளாறு தொகுதியில் 104 பேரும் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.5 சட்டசபை தொகுதிகளிலும் 25, 26 ஆகிய இரண்டு நாட்களில் 410 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவர்களில் கொரானா தொற்று பாதித்தவர்கள் 12 பேர் ஆவார்கள். தொடர்ந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது….

The post முதியோர், கொரோனா பாதித்தவர்கள் காரைக்கால் மாவட்டத்தில் 410 பேர் வீட்டிலிருந்தபடி தபால் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Karaikal district ,corona ,Karaikal ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...