×

விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: மேலும் 7 பேர் கைது

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் நீலமேக அமரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தற்போது மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் முத்யாலப்பன், அஜய், பார்த்தசாரதி, பிரசாத், விக்னேஷ், லக்ஷ்மன், காளியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 7 பேரும் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கஞ்சா கடத்தலில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலே காவலர் கொலைக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Tamilnadu ,Visakhapatnam , Tamil Nadu,police,murder,Visakhapatnam,7 others,arrested
× RELATED கொரோனா கதியில் இருந்து மீண்டதா?...