×

புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் கார்

புதிய  தலைமுறை அம்சங்களுடன் மாற்றம் கண்டுள்ள புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்  எஸ்யூவி ரக கார் இந்திய வருகை குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்  பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய மிட்சுபிஷி  திட்டமிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்றாம்  தலைமுறை மிட்சுபிஷி ஏற்கனவே பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த  மாடலை அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்ய மிட்சுபிஷி  திட்டமிட்டுள்ளது.

இதன் டிசைன் மிக வசீகரமாக மாற்றப்பட்டு  இருக்கிறது. முன்புறத்தில் பிரம்மாண்டமாக தோற்றம்  அளிக்கிறது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் தனித்துவமான டிசைனுடன்  கவர்கிறது. உட்புறம் மிக பிரியமாகவும், தரமான பாகங்களுடன் மிளிர்கிறது.  இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன்  க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, லெதர் இருக்கைகள், 7 ஏர்பேக்குகள், 360 கேமரா,  எலக்ட்ரானிக் ஹேண்ட்பிரேக் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கிறது. இந்த  காரில், 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த  இன்ஜின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும்  வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு  இருக்கிறது. இந்த இன்ஜின் பாரத் ஸ்டேஜ் - 6 மாசு உமிழ்வு தரத்திற்கு  இணையானதாக இருக்கிறது.

ஆப்ரோடு பிரியர்களின் சாய்ஸில் இருக்கும் இந்த  எஸ்யூவி ரக கார், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. அதேபோன்று, ஆப்ரோடு  சாகசங்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது. இப்புதிய  காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய மிட்சுபிஷி நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, விலையை மிக சரியாக நிர்ணயிக்கும் வாய்ப்பை  அந்நிறுவனம் பெற முடியும். டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் போர்டு எண்டெவர்  போன்ற பிரிமியம் ரக எஸ்யூவி மாடல்களுடன் இது போட்டி போடும்.  34 லட்சம்  முதல் 37 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் தற்போது கிடைக்கிறது. புதிய  தலைமுறை மாடல் இதைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mitsubishi , Mitsubishi Bajero Sport Car
× RELATED ஜப்பானைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்