×

கமிஷனர் அலுவலக பிஆர்ஓவாக உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலராக உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரமூர்த்திக்கு கடந்த வாரம் உதவி கமிஷனராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவர் மக்கள் தொடர்பு அலுவலக உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலக  உதவி கமிஷனராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், ஏற்கனவே மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த உதவி கமிஷனர் பாலமுருகன் அயனாவரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்  என்பது குறிப்பிடதக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sundaramurthy ,commissioner , Assistant,Commissioner Sundaramurthy,responsible for , commissioner's office PRO
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்