×

ரயில்வேயில் மர ஸ்லீப்பர்களுக்கு டாட்டா பை பை...

புதுடெல்லி: இந்திய ரயில்வேயில் மர ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, காம்போசிட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இதுபற்றி ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:மரக்கட்டை ஸ்லீப்பர்களால் அசவுகரியம் ஏற்படுவதாக பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வந்தன. இதனால், ஒரு குறிப்பிட்ட வழியில், காம்போசிட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை, இரும்பு,  நாரால் (எக்குநார் பிளாஸ்டிக்) செய்யப்பட்டு இருக்கும். இந்திய ரயில்வேயில் முதல்முதலாக 2003-ம் ஆண்டில் முரதாபாத்தில்தான் `காம்போசிட் ஸ்லீப்பர்கள் ஸ்லீப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு இந்த கலப்பு  ஸ்லீப்பர்கள், கடந்த 2016-ம் ஆண்டில் 10 மண்டலங்களில் செயல்படுத்தப்பட்டன. இப்போது, எல்லா பகுதிகளிலும் மரக்கட்டை ஸ்லீப்பர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு `எக்குநார் பிளாஸ்டிக்  ஸ்லீப்பர்கள் அமைப்படுகின்றன.

அதேபோல், தண்டவாளங்கள் அமைக்க பயன்படுத்தப்படும் மரக்கட்டைகளுக்கு  பதிலாக காம்போசிட் ஸ்லீப்பர்கள் (எக்குநார் பிளாஸ்டிக்) பயன்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு மூத்த அதிகாரி தெரிவித்தார்.  நகைச்சுவை பதில்: முன்னதாக, தகவல் தெரிவிக்கும்போது, குறைந்த விலையுடன் மற்றொரு மாற்று பொருளை நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அதுபற்றி அவர் கூறுகையில், ``எக்குநார் பிளாஸ்டிக் கலவையை உள்ளடக்கிய  கலப்பு ஸ்லீப்பர்களுக்கு மற்ற ஸ்லீப்பரைவிட அதிகமாக செலவு செய்கிறார்கள். கலப்பு ஸ்லீப்பரின் விலை ரூ.25 ஆயிரமாக உள்ளது. ஆனால், சேனல் ஸ்லீப்பர்களுக்கு வெறும் ரூ.7000தான் செலவாகும் என்று சிரித்துக்  கொண்டே கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TATA BAY PI ,railway , TATA BAY PI,wooden, slippers,railway ...
× RELATED சென்ட்ரல் ரயில்வே ஆயுத கிடங்கில்...