×

விஜயசாந்தி பங்கேற்ற பிரசார மேடை சரிந்தது

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்டிர சமிதி கட்சி சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே எதிர்கொள்ளும் விதமாக கடந்த மாதம் ஆட்சியை கலைத்தது. அங்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவித்தது. இதையடுத்து  பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி, பல்வேறு இடங்களில்   தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை நாகர் கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை பகுதியில் பிரசாரத்துக்கு அமைக்கப்பட்ட மேடையில் நடிகை விஜயசாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் மேடையில்  பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமின்றி தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதே பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijaya Santhi , Vijayasanthi, Prasada Platform
× RELATED கர்நாடக மாநிலம்; சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!