×

மெமரி கார்டு திருடிய நீச்சல் பயிற்சியாளரை சிறைக்கு அனுப்ப மறுப்பு: பொய் வழக்கு போட்டதால் நீதிபதி விடுவித்தார்

சென்னை: வண்டலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராதா(25). இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி செய்து வந்தார். கடந்த 6ம் தேதி ராதா நீச்சல் பயிற்சி முடித்துவிட்டு தனது செல்போனை எடுத்து செல்லாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து ராதா நீச்சல் குளத்திற்கு வந்து அங்கு நீச்சல் பயிற்சியாளர் லஷ்மி நாராயணன் (42) என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பிறகு ராதா காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறியதும் அவர் செல்போனை கொடுத்துள்ளார். செல்போனை பெற்று ஆய்வு செய்த போது, அதில் மெமரி கார்டு மாயமாகி இருந்தது. அதில் ராதா பல புகைப்படங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி, ராதா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மெமரி கார்டை திருடிவிட்டதாக புகார் அளித்தார். போலீசார் லஷ்மி நாராயணன் மீது பெண்களுக்கு எதிரான குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ேநற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர் லஷ்மி நாராயணனை சைதாப்பேட்டையில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி சரிதா வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சரிதா, போலீசாரிடம் மெமரி கார்டு திருட்டு வழக்கில் எப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் கைது செய்ய முடியும் என கேட்டு பயிற்சியாளரை சிறையில் அடைக்க மறுப்பு ெதரிவித்து அவரை விடுவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trainer ,jail ,Judge , memory card ,Judge relieved
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!