×

வை-பை வசதியுடன் நவீன வடிவமைப்பில் களமிறங்குகிறது ஸ்பைஸ்ஜெட் விமானம்

புதுடெல்லி: விமான சேவையில் முக்கிய பங்கு  வகிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 737 மேக்ஸ் போயிங் ரக விமானத்தை விரைவில்  உள்ளூர் பயணிகள் சேவைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த விமானத்தில்  சாட்காம் என்ற வசதி இணைக்கப்பட்டுள்ளது.இதனால் விமான பயணிகள் வை-பை, இணைய  சேவையை விமானத்தில் பறக்கும் போதே பயன்படுத்தலாம்.  இது குறித்து  ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய்சிங் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில் நவீன  வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு கொண்ட 737 மேக்ஸ் 8 ரக விமானத்தை அறிமுகம்  செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. விமானத்தில் பயணிகள் விரும்பும் வகையில் சொகுசான  இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக விமானத்தில்  வை-பையுடன் கூடிய பிராட்பேண்ட் இணையதள வசதியை தர இருக்கிறோம். இந்த விமான  சேவை மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் தொடங்கும். . இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SpiceJet , Air service, spice jet, modern design
× RELATED சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை