×

புளியந்தோப்பில் பரபரப்பு: அறிவிக்கப்படாத மின்தடை மின்வாரிய அலுவலகம் முற்றுகை பு

ளியந்தோப்பு: அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை புளியந்தோப்பில் நேரு நகர், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர், டிக்காஸ் ரோடு ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேறப்ட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில், இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடையும், குறைந்த மின் அழுத்தமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர் உள்பட அனைத்து மின்சார பொருட்களும் பழுதானதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால், கொசுக்கடி மூலம் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து, பேசின்பிரிட்ஜ் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை முதல் அப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம், சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை.இதனால் விரக்தியடைந்த பெண்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர், மதியம் சுமார் 12 மணியளவில் பேசின்பிரிட்ஜ் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பேசின் பிரிட்ஜ் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, மேற்கண்ட பகுதிகளில் புதிய கேபிள்கள் அமைத்து, மின்சாரம் முறையாக வழங்குவதாக உறுதியளித்தார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியலால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Resistor, power office, siege Wed
× RELATED 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி...