தசரா விடுமுறையையொட்டி அக்டோபர் 16ல் விடுமுறை கால நீதிமன்றம்: தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை :நவராத்திரி விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு அக்டோபர் 13 முதல் அக்டோபர் 21 வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால அவசர வழக்குகள் அக்டோபர் 16 ம் தேதியன்று விசாரிக்கப்படும்  என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் 4 நான்கு நீதிபதிகளும், மதுரையில் 3 நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்.

அவசர வழக்குகளை அக்டோபர் 15 ம் தேதி  மதியம் 1:30 மணி வரை   தாக்கல் செய்யலாம். சென்னையில் தாக்கல் செய்யப்படும்  வழக்குகளை  நீதிபதிகள் வைத்தியநாதன்,  கிருஷ்ணன் ராமசாமி,பார்த்திபன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள். மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை  நீதிபதிகள்  எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன்,  சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் விசாரிப்பார்கள்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Holidays ,Dussehra Vacation Court , Dussehra Holidays, Court, Chief Registrar Notice
× RELATED நாகராஜா கோயில் தேரோட்ட திருவிழாவை...