×

கால் இறுதியில் ஜோகோவிச்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நோவக் ஜோகோவிச், ரோஜர்  பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.நேற்று நடந்த 3ம் சுற்றுப் போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 72ம் நிலை வீரரான இத்தாலியின் மார்கோ  செச்சினாடோவை எதிர்த்து விளையாடினார். இந்தாண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதியில், செச்சினாடோவிடம்  ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். எனவே, தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை ஆக்ரோஷமாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று கால்  இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நட்சத்திர வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 2-6, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின்  ராபர்டோ படிஸ்டா அகட்டை போராடி வென்றார். கால் இறுதியில் பெடரர், ஜப்பானின் நிஷிகோரியை சந்திக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jogovich ,end , Jogovich,end , foot
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...