×

இளைஞர் ஒலிம்பிக் சவுரப் தங்கம்

 பியூனாஸ்ஏர்ஸ்: இளைஞர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சவுரவ் சவுதாரி தங்கம் வென்று அசத்தினார்.அர்ஜென்டினாவின் பியூனாஸ்ஏர்சில் நடக்கும் இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரில், ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி  சுடுதல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்தியாவின் நட்சத்திர வீரரான 16 வயதாகும் சவுரப் சவுதாரி, தகுதிச்சுற்றில் 600க்கு 580  புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இறுதிச் சுற்றிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 244.2 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை  வென்றார். இதன் மூலம், இளைஞர் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்லும் 2வது நபர், ஆண்கள் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற  சாதனைகளை படைத்தார்.

சவுரப் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டிலும், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பிலும் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக, மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் முதல் தங்கம் வென்று சாதித்தார். பதக்கப் பட்டியலில் இந்தியா 3  தங்கம், 3 வெள்ளி என 6 பதக்கத்துடன் 6வது இடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Youth Olympic Sourab , Youth,Olympic,Sourab,Gold
× RELATED சில்லிபாயின்ட்..