×

கவாஜா பொறுப்பான சதம் போராடி டிரா செய்தது ஆஸ்திரேலியா

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் கடைசி நாளில் கவாஜா பொறுப்புடன் ஆடி சதம் அடிக்க, ஆஸ்திரேலியா போராடி டிரா செய்தது.ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் துபாயில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 482, ஆஸ்திரேலியா 202 ரன்  எடுத்தன. 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் சேர்த்து டிக்ளேர் செய்தது. 462 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது  இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னுடன் இருந்தது. கவாஜா 50, ஹெட் 34  ரன்னுடன் களத்தில் இருந்தனர்.கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.  உஸ்மான் கவாஜா, ஹெட் பொறுப்புடன் ஆடி 4வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தனர். ஹெட் 72 ரன்னில் முகமது  ஹபீஸ் பந்தில் ட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கவாஜா சதம் அடித்தார். யாசிர் ஷா சுழலில் லபுஸ்யாக்னே (13) விரைவில் வெளியேறிய  போதிலும், கவாஜா, கேப்டன் பெய்னே இணைந்து அணியை தோல்வியிலிருந்து மீட்க நங்கூரமிட்டனர். கவாஜா 141 ரன் எடுத்த நிலையில் யாசிர்  பந்தில்  ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஸ்டார்க் (1), சிட்டில் (0) விக்கெட்டை யாசிர் கைப்பற்றிய போதிலும், ஒருமுனையில் பெய்னே நந்தை வேகத்தில் ஆட்டத்தை நகர்த்தி  அரைசதம் அடித்து அணியை காப்பாற்றினார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 362 ரன் எடுத்து, போட்டியை டிரா செய்தது. பெய்னே 61 ரன் (194 பந்து), லியான் 5 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் 4, அப்பாஸ் 3, முகமது ஹபீஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.  2வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 15ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kawasa ,match , Kawasa,struggling ,hundred, match
× RELATED மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்