×

மானாமதுரையில் மழை வேண்டி காவல் தெய்வத்திற்கு ‘கமகம’ கறி விருந்து

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மழை வேண்டி காவல் தெய்வத்திற்கு கறி விருந்து படையல் படைத்து பெண்கள் வழிபட்டனர். மானாமதுரை அண்ணாசிலையில் இருந்து பைபாஸ்ரோடு செல்லும் வழியில் ரயில்வேகேட்டை ஒட்டி உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் கோயில். மானாமதுரை நகர் காவல் தெய்வமாக உள்ள எல்லைப்பிடாரியம்மனுக்கு காப்பு கட்டி சித்திரை திருவிழா நடத்தி விட்டுத்தான் ஆனந்தவல்லி சோமநாதருக்கு சித்திரை திருவிழா துவங்கும். பெண் தெய்வம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பத்து நாள் சித்திரை திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் செவ்வாய்சாட்டுதல் விழாவும் நடப்பது வழக்கம். இந்தாண்டு செவ்வாய் சாட்டுதால் கடந்த செவ்வாய்கிழமை துவங்கியது. ஏழாம் நாளான நேற்றுமுன்தினம் கோவிலில் இந்த செவ்வாய் வழிபாடு துவங்கியது.

கிராம கோயில் தெய்வங்களுக்கு செய்யப்படும் பணியாரம், கொழுக்கட்டையுடன் நாட்டுக்கோழி, ஆட்டுகறி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை கிராம மக்கள் அம்மனுக்கு படையலாக வைத்தனர். பின்னர் மண் சட்டி பானையில் அடுக்குகளாக வைத்து அதன் மேல் தீப்பந்தம் ஏற்றி ஊர்வலமாக கொண்டுவந்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு படையிலிட்டு வழிப்பட்டனர். அம்மனுக்கு படையலிடும் பொருட்களுடன் ஏற்றப்படும் தீபம் கோவில் வரை எரிந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்று நம்பபடுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை கஸ்பாகிராமத்தினர் செய்திருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : goddess ,Manamadurai , 'Kamagama' dinner, goddess, rain, Manamadurai
× RELATED திருமலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...