×

காளையார்கோவிலில் தூய்மைப்பணி

காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி காளையார்கோவில் காளையப்பன் தெருவில் பொதுசுகாதாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் தூய்மைப்பணி மற்றும் டெங்கு ஒழிப்பு பணி நடந்தது. தூய்மைப்பணிக்கு காளையார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராகவேந்திரன், டாக்டர் நிவேக் தலைமை வகித்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவர் முன்னிலை வகித்தார். காளையப்பன் தெரு பகுதியில் புகை மருந்து அடித்தல், புதர்களை அகற்றுதல், குளோரினேசன் செய்தல், டெங்கு குறித்து வீடுகளில் உள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போன்ற பணிகள் நடந்தன.

முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் பூமிநாதன், ராஜேஸ்கண்ணன், முகமது வஹாப், நாகராஜன் மற்றுமு களப்பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவுப்படி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி அறிவுரைப்படி நடத்தப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kalaiyarkovil
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்