×

அமெரிக்காவில் வினோதம்..... டிரம்ப் மீதான எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய வாலிபர்

நியூயார்க்: நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோர  புல் பகுதியில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்க்கப்பட்ட புல் பகுதியின் மத்தியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.

நியூயார்க்கின் புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலையின் கீழ் பகுதியில் என்மீது சிறுநீர் கழிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே, டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : United States , America, dog, urine, trump statue, New York
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்