சென்னை : சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவின் முன்ஜாமின் மனுவுக்கு மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் தொழில் அதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன. இதற்கிடையே ரன்வீர் ஷாவின் தோழியான கிரண்ராவ் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகள், தூண்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்த தொழிலதிபர் கிரண் ராவை போலீசார் தேடிவந்த நிலையில், கிரண் ராவின் நிறுவன பொதுமேலாளர் தயாநிதி உட்பட ஊழியர்கள் 7 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். போலீஸ் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆஜராகவில்லை. இதனால் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க சிலைகடத்தல் தடுப்பு பிரிவு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கைது செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை அக். 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி