×

முதலாம் உலகப்போர் நிகழ்வுகளை வண்ணப் படங்களாக மாற்றி இயக்குநர் பீட்டர் ஜாக்ஸன் சாதனை

லண்டன் : முதலாம் உலகப்போரின் போது நடந்த நிகழ்வுகளின் ஆவணத்தை 100 ஆண்டுகளுக்குப் பின் வண்ண நிறமாக மாற்றி திரைப்பட இயக்குநர் பீட்டர் ஜாக்ஸன் சாதனை படைத்துள்ளார். உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற முதல் உலகப்போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப்போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும், மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர் பக்கங்களில் நின்று போரிட்டன. 1914 முதல் 1918 வரை நடைபெற்ற போர்கால நிகழ்வுகள் கருப்பு வெள்ளைப் பதிவுகளாக இருந்தன.

இதனை தற்காலத்திற்கு ஏற்றார் போல மாற்றலாம் என லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தின் இயக்குநர் பீட்டர் ஜாக்ஸன் முடிவு செய்தார். அழுக்காகவும், நீர் பட்டும், கிழிந்தும், சுருங்கியும் காணப்பட்ட முதல் உலகப்போருடன் தொடர்புடைய புகைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வண்ணப்படங்களாக மாற்றியுள்ளார். இதற்காக 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். போர்ச்சூழலில் பதுங்கு குழியில் இருந்த வீரர்கள், அவர்களின் வாழ்க்கை முறை போன்றவை தற்போது வண்ணமயமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த அரிய வண்ணப்படம் இந்த மாத இறுதியில் லண்டனில் நடக்க உள்ள 3டி திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Peter Jackson ,events , World War I, Color Pictures, Director Peter Jackson
× RELATED உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான...