×

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா கோலாகலம்

நெல்லை : 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நெல்லை பாபநாசத்தில் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் வருவதால் மகாபுஷ்கர விழாவிற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவ்விழா வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில்சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்கியது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி தாமிரபரணி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவிகள், மடாதிபதிகள் நெல்லைக்கு வருகை தந்துள்ளனர்.புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை பாபநாசம் செல்கிறார். இந்த விழாவையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamirabarani Mahupuskara Festival , Thamirabarani Mahupuskara Festival, celebrated once ,144 years
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பரப்புரை