×

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த 2 பேர் சிறையில் அடைப்பு: செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா. சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். கடந்த 2013ல் கூலிப்படையினர் அவரைவெட்டி கொலை செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய, ஆசிரியர்கள் பொன்னுசாமி மற்றும் மேரி  புஸ்பம், வக்கீல்கள் பாசில், வில்லியம், அரசு மருத்துவர் ஜேம்ஸ் சதிஷ்குமார் இன்ஜினீயர் போரிஸ், கூலிப்படையை சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வப்ரகாஷ்,  அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை 7வது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதுவரை 11 அரசு சாட்சிகள்  விசாரிக்கப்பட்டுள்ளனர். ‘வழக்கின் முக்கிய சாட்சிகளை வக்கீல் பாசில், கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று அபிராமபுரம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனால் அவர்களது ஜாமீனை நீதிமன்ற ரத்து செய்தது. இரு்ப்பினும், அவர்கள் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இதனால் இருவரையும் கைது செய்ய வாரன்்ட் பிறப்பிக்க சிறப்பு வக்கீல் விஜயராஜ் 7வது செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் பாசிலும்், ஏசுராஜ்னும் நேற்று செசன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை பொறுப்பு நீதிபதி சமீனா, 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Surrey , Dr. Subbaiya, Sessons, Court Order
× RELATED மாணவனை சுட்டுக்கொன்ற வழக்கு தேனியில் சரணடைந்த ரவுடிக்கு போலீஸ் காவல்