×

மபி.யில் மண்ணை தோண்டியபோது ஏழை தொழிலாளிக்கு கிடைத்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைரம்: குடும்ப வறுமை நீங்கும் என மகிழ்ச்சி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா வைர சுரங்கத்தில் உலகின் 2வது தரமான வைரங்கள் கிடைக்கின்றன. இங்குள்ள அதிக ஆழமில்லாத சிறிய சுரங்கம் ஒன்றில் கடந்த 1961ம் ஆண்டில் மிகப்பெரிய வைரம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பகுதியில் மோதிலால் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளி ஒருவர் நேற்று முன்தினம் தோண்டியபோது ₹1.5 கோடி மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது. இதனால், பிரஜாபதியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வைரத்தை வரும் நாட்களில் ஏலத்தில் விடுவோம் என மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனிடையே, தன்னுடைய கைகளில் வைரத்தை கெட்டியாக பிடித்தபடி தொலைக்காட்சிக்கு போஸ் கொடுத்த பிரஜாபதி கூறுகையில், “மிகுந்த சந்தோஷமாக உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என்னுடைய வயதான தாய், தந்தையை நன்கு கவனித்துக் கொள்வேன். என்குடும்பத்தின் வறுமை போகும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : When digging,soil, millet,poor worker,Diamond worth Rs. 1.5 crore,Happy Family poverty
× RELATED டெல்லியில் குடிநீரை வீணாக்கினால்...