×

காஞ்சிபுரம் கோயில்களில் மொரீஷியஸ் அதிபர் வழிபாடு

சென்னை: மொரீஷியஸ் நாட்டின் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி நேற்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மற்றும் குமரகோட்டம் முருகன் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஏகாம்பரநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய மொரீஷியஸ் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  இந்தியப் பெருங்கடலில் உள்ள ஏராளமான தீவு நாடுகளில் மொரீஷியஸூம் ஒன்று. எங்களின் குடும்பம் தமிழகத்தில் இருந்து குடிபெயர்ந்து 5 தலைமுறை ஆகிறது. கடந்த 150 ஆண்டுகளில் மொரீஷியஸ் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

மொரீஷியஸ் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கும் முக்கியமானதாகும். மொரீஷியஸ் நாட்டில் தற்போது தமிழர்களிடையே தமிழ்மொழி ஆர்வம் மெல்லக் குறைந்துவருகிறது. எனவே அவர்களிடம் தமிழ்மொழி ஆர்வத்தை வளர்க்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறோம்.  இந்தியா உலக நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் அடையாளமாக இருக்கிறது என்றார். முன்னதாக வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு புதுச்சேரி செல்லும் வழியில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mauritius ,temples ,Kanchipuram , Mauritius,hapel,worship , Kanchipuram temples
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...