×

தமிழகத்தில் 2000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 2,089 பேர் பாதிப்பு: 09 பேர் பலி; 12,157 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!!

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 77 ஆயிரத்து 279 (8,75,279) ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  * தமிழகத்தில் மேலும் 2,089  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,77,279 ஆக அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,241 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,52,463 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,659 ஆக உயர்ந்துள்ளது.* அரசு மருத்துவமனையில் 05; தனியார் மருத்துவமனையில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.* சென்னையில் இன்று ஒரே நாளில் 775 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,45,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை 1,92,62,447 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,173 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.* தமிழகத்தில் தற்போது 12,157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,29,825 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,287 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,47,418 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 801 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* குஜராத்- 1* கர்நாடகா-1* மேற்கு வங்கம்-1* கேரளா-1* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.* UAE -1. …

The post தமிழகத்தில் 2000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 2,089 பேர் பாதிப்பு: 09 பேர் பலி; 12,157 பேருக்கு சிகிச்சை; சுகாதாரத்துறை அறிக்கை.!!! appeared first on Dinakaran.

Tags : Corona damage ,Tamil Nadu ,Chennai ,Corona pandemic number ,lakh ,Corona ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...