×

காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

சென்னை:  தமிழக காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஒப்புதலோடு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தகவல் ஆய்வுத் துறை தலைவர் பிரவின் சக்கரவர்த்தி தமிழக காங்கிரஸ் தகவல் ஆய்வுத் துறை நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதன்படி, தமிழக காங்கிரஸ் தகவல் ஆய்வுத் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக டி.செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோரை நியமித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coordinators ,Congress Party ,Information Technology Coordinators , Congress Party, Research Department, Coordinators Appointment
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...