×

நாத்திகர்கள் பிரச்னை செய்ய வாய்ப்பு புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரியவருக்கு அபராதம்: ஐகோர்ட் அதிரடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்காசியை சேர்ந்த ஈஸ்வரன் சித்தா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  புஷ்கரம் நிகழ்ச்சியில், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் புகுந்து பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க நெல்லை கலெக்டர் தலைமையில் ஒரு குழுவை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.மகாராஜன் நாத்திகர்கள் பிரச்னை செய்ய வருவார்கள் என்று மனுதாரர் கற்பனையில் சொல்கிறார். யூகக்தின் அடிப்படையில் இதுபோன்ற குற்றச்சாட்டுஎன்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கற்பனை, யூகம் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர கூடாது என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Atheist problem, opportunity pushkaram performance, horde action
× RELATED நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி...