×

ஆசிய பாராலிம்பிக் வெண்கலம் வென்றார் தமிழக வீரர் ஆனந்தன்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாராலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஆனந்தன்  200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். கர்நாடகாவில் உள்ள  ராணுவ மையத்தில் பணிபுரிபவர் ஆனந்தன். தமிழகத்தைச் சேர்ந்த  இவர் தடகள வீரர் ஆவார்.  தேசிய அளவிலான 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று அசத்தி வருகிறார். மார்ச் மாதம் துபாயில் நடந்த  10வது உலக கிராண்ட் பிரீ தடகள போட்டியின்  400 மீட்டர் பந்தயத்தில் தங்கம், 200 மீட்டர் போட்டியில் வெள்ளி வென்றார். ஜூலை மாதம்  பெங்களூருவில்  ஆசிய பாராலிம்பிக் தொடருக்கான தகுதிப் போட்டிகள் நடைப்பெற்றன.

அதில் பங்கேற்ற ஆனந்தன் 100 மீட்டர் போட்டியில் வெள்ளி, 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதிப்பெற்ற முதல் ராணுவ வீரர் என்ற பெருமையும் ஆனந்தனுக்கு கிடைத்தது. இந்நிலையில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாராலிம்பிக் தொடரில், இந்தியா சார்பில் களமிறங்கிய ஆனந்தன் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anandan ,Asian ,Paralympic , Asian Paralympic Bronze, Tamil Nadu player Anandan
× RELATED மாயார் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஆசிய...