×

ஐநா தூதர் பதவியில் இருந்து விலகிய நிக்கி ஹாலேக்கு மாற்றாக 5 பேரை வைத்துள்ளேன்

வாஷிங்டன்: ‘ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை ராஜினாமா செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேக்கு மாற்றாக, அப்பதவியில் நியமிக்க 5 பேரை வைத்துள்ளேன்’ என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக கடந்த ஆண்டு முதல் இந்திய அமெரிக்கரான நிக்கி ஹாலே (46) இருந்து வந்தார். இந்நிலையில், திடீரென அவர்பதவியை ராஜினாமா செய்து அதிபருக்கு கடிதம் அனுப்பினார்.இந்த ஆண்டு இறுதியில் அவர் பதவியில் இருந்து விலகுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கி ஹாலேயின் ராஜினாமா கடிதத்தை அதிபர் டிரம்ப் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், “நிக்கி எனது சிறந்த நண்பர். அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.. ஐநா சபைக்கான அடுத்த அமெரிக்க தூதர் யார் என்பது குறித்த அறிவிப்பு அடுத்த 3 வாரத்தில் வெளியாகும். முன்னாள் துணை தேசிய ஆலோசகர் தினா பவுல் உட்பட 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனது மகள் இவாங்காவின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது. ஆனால், அவரை தேர்வு செய்தால் சலுகை அளிப்பதாக குற்றம் சாட்டப்படுவேன்’’ என்றார்.

‘இவாங்காவை நியமித்தால் சிறப்பாக செயல்படுவார்’
நிக்கி ஹாலேவுக்கு பதிலாக தனது மகள் இவாங்காவை நியமிக்க டிரம்ப் நினைக்கிறார். இது பற்றி அவரிடம் நேற்று கேட்கப்பட்டபோது, ‘‘நிக்கி வகித்த பதவியை பிடிக்க பலர் விரும்புகின்றனர். அந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பதை இன்னும் 3 வாரங்களில் அறிவிப்பேன். இவாங்காவை விட அந்த பதவிக்கு தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என நம்புகிறேன்’’ என்றார். இந்த நிலையில் வரும் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடுவார் என யூகங்கள் கிளம்பியுள்ளன. இதை நிக்கி ஹாலே மறுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nicky Hale ,ambassador ,UN , UN Ambassador, Nicky Halle
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...