×

வாடிப்பட்டி பகுதியில் தொடர் மழை குட்லாடம்பட்டி அருவியில் கொட்டுது தண்ணீர்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி மற்றும் சுற்று பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குட்லாடம்பட்டி நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து துவங்கியுள்ளதுமதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி. சிறுமலை பகுதியில் அமைந்துள்ள இந்த அருவி சுற்றுலா பயணிகளால் ‘மதுரையின் குற்றாலம்’ என்றழைக்கப்படுகிறது. மேலும் மூலிகை குணம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த அருவி சில மாதங்களாக இப்பகுதியில் போதிய மழையில்லாததால் முற்றிலும் வறண்டு கிடந்தது.

வனத்துறைப் கட்டுப்பாட்டில் இருப்பதால் அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. சில தினங்களாக வாடிப்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த அருவியில் நீர் வரத்து துவங்கியுள்ளது. தொடர்ந்து இன்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். வனத்துறையின் சார்பில் படிக்கட்டு வசதிகளும், அருவியில் பெண்கள் குளிப்பதற்காக தனி இடமும், உடை மாற்றுவதற்காக தனி அறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளிடம் நபர் ஒன்றிற்கு ரூ10வீதம் வனத்துறை மற்றும் வனக்குழு மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இன்று முதல் அருவியில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில் வனப்பகுதியின் சுற்றுச்சூழல் நலன் கருதி அருவியின் அடிவாரத்திற்கு மேல் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, சாம்பு மற்றும் மது, உணவு பொருட்கள் போன்றவற்றை மேலே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனைக்கு பின்னரே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சோழவந்தான் வனத்துறை வனச்சரகர் ஆறுமுகம் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Vadipatti ,Kutlambampatti , Wilt, Rain, Kudlapampatti Falls, Water
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு