×

ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

வாஷிங்டன்: ஐநா சபைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றி வந்த நிக்கி ஹாலே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நிக்கி ஹாலே. இவர் ஐநா சபையில் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்தார். டிரம்ப் நிர்வாகத்தில் மூத்த பெண் அதிகாரியாகவும் அவர் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது பதவியை ராஜினாமா செய்து நிக்கி எழுதியுள்ள கடிதத்தை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambassador ,US ,United Nicky Hall , US Ambassador, United Nicky Hall ,resigns
× RELATED கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீ..!!