×

யூத் ஒலிம்பிக்ஸ் தங்கம் சுட்டார் மானு பேக்கர்

அர்ஜென்டினாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிர் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பேக்கர் (16 வயது) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். பரபரப்பான பைனலில் 236.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த மானு தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். ஆசிய விளையாட்டு மற்றும் உலக சாம்பியன்ஷிப்பில் ஏமாற்றமளித்த அவர், யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த பிரிவில் ரஷ்யாவின் இயானா எனினா (235.9) வெள்ளிப் பதக்கமும், ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manu Baker ,Olympic , Youth Olympic, Gold, Manu Baker
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...