×

பிலால் ஆசிப் சுழலில் மூழ்கியது ஆஸ்திரேலியா

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்குவித்தது.
இமாம் உல் ஹக் 76, முகமது ஹபீஸ் 126, ஷபிக் 80, ஹரிஸ் சோகைல் 110 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. கவாஜா 17, பிஞ்ச் 13 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 142 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
அறிமுக வீரர் பிஞ்ச் 62 ரன் (161 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), உஸ்மான் கவாஜா 85 ரன் (175 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் அறிமுக ஸ்பின்னர் பிலால் ஆசிப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி. பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர்.

51.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 142 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, மேற்கொண்டு 60 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (3 பேர் டக் அவுட்). பாகிஸ்தான் பந்துவீச்சில் பிலால் 21.3 ஓவரில் 7 மெய்டன் உட்பட 36 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். முகமது அப்பாஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, பாலோ ஆன் தராமால் 280 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்துள்ளது. கை வசம் 7 விக்கெட் இருக்க, அந்த அணி 325 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் ஆஸி. அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bilal Asip ,Australia , Complimentary, Delhi-Gujarat conflict
× RELATED பப்புவா நியூ கினியா நிலச்சரிவில்...